கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்..!
 

 
கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் பிரபல நடிகர் பெங்களூருவில் அவசர ஊர்தி ஓட்டுநராக மாறியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சங்களை கடந்து சென்றுகொண்டுள்ளது. இதனால் பல்வேறு திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னட சினிமாவில் ‘யுவரத்னா’, ‘ருஸ்தம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் கவுடா கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவசர ஊர்தி ஓட்டுநராக மாறியுள்ளார்.

பெங்களூருவில் இயங்கி வரும் ‘புரோஜக்ட் ஸ்மைல் டிரெஸ்ட்’ என்கிற அமைப்புடன் இணைந்து இந்த பணியினை அவர் செய்து வருகிறார். இதுகுறித்து கன்னட ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய நடிகர் அர்ஜுன் கவுடா, கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக சிறப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளேன். அதை பின்பற்றியே அவர்களுக்கான எனது சமூகப் பணியினை செய்து வருகிறேன். என்னை வாழ்த்தியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ள்

From Around the web