விஜய்யுடன் தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்..!

 
நடிகர் விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பதை பிரபல நடிகர் சமூகவலைதளத்தில் உறுதி செய்துள்ளார். அதை நெட்டிசன்கள் பலர் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

தமிழில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார் யோகி பாபு. வடிவேலு சினிமாவை விட்டு விலகிவிட, சந்தானம் ஹீரோவாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்த, யோகிபாபு காட்டில் அடை மழை தான்.

ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், நயன்தாரா என தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்தார். அதை தொடர்ந்து முக்கிய நடிகர்கள் நடிக்கும் அனைத்து படங்களிலும் யோகி பாபு உள்ளார்.


விஜய்யுடன் ஏற்கனவே மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என மூன்று படங்களில் நடித்துவிட்டார். அவரை விஜய் விட மாட்டார் போல. அதனால் விஜய்யின் தளபதி 65 படத்திலும் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து  அவரே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘தளபதி 65’ படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘தளபதி 65’ படப்பிடிப்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web