சல்யூட் அடிக்காத போலீஸ் அதிகாரியை மிரட்டிய பிரபல நடிகர்..?

 
சுரேஷ் கோபியுடன் அதிகார் சி.ஜே. ஆண்டனி
தனக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்யாத காவல்துறை அதிகாரியை பிரபல நடிகர் மிரட்டியதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திருச்சூருக்கு அருகேவுள்ள பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லத்திட்ட உதவிகளை செய்வதற்கு மலையாள நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் அவரிடம் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரிப்பதற்கு ஒல்லூர் காவல்நிலைய போலீஸ் சி.ஜே. ஆண்டனியை அழைத்து பேசினார். அப்போது சுரேஷ் கோபிக்கு அந்த காவல்துறை சல்யூட் அடிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ் கோபி பாராளுமன்ற உறுப்பினருக்கு நீங்கள் காட்டும் மரியாதை இதுதானா? என்று கோபமாக கேட்டதாக தெரிகிறது.

அதை தொடர்ந்து காவல் அதிகாரி சி.ஜே. ஆண்டனி அவருக்கு சல்யூட் அடித்தார். இந்த சம்பவம் சமூகவலைதலைங்களில் வெளியாகி வைரலானது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த சுரேஷ் கோபி, நான் ஒரு எம்பி என்பதற்காக அவர் மரியாதை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

From Around the web