மிரட்டலுக்கு பயந்த சித்தார்த் தாய்- ஆதரவாக களித்தில் குதித்த பிரபல நடிகர்..!

 
மிரட்டலுக்கு பயந்த சித்தார்த் தாய்- ஆதரவாக களித்தில் குதித்த பிரபல நடிகர்..!

கொலை மிரட்டல் விடுத்து தனக்கு வந்த அழைப்புகளை கண்டு தன்னுடைய தாயார் பயந்துவிட்டதாக நடிகர் சித்தார்த் போட்ட பதிவுக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டது பாஜக தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 பேர் கொலை மிரட்டல் விடுத்து அழைத்ததாகவும் கூறி ட்விட்டரில் பதிவிட்டார்.


அதை தொடர்ந்து சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மெட்ரோ படத்தில் நடித்து கவனமீர்த்த நடிகர் ஷிரித் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். நேர்மையாக கேள்வி கேட்பவரை நீங்கள் மிரட்டினால் தமிழகத்தில் யாரும் அஞ்சப்போவதில்லை. மிரட்டி பணியவைக்க ஒது வடநாடு கிடையாது. இது தமிழ்நாடு. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செய்யுங்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
 

From Around the web