ஃபேஸ்புக் பக்கத்தை மீட்டெடுத்த பிரபல நடிகர்..!

 
நடிகர் அனுப் மேனன்

மலையாள சினிமா உலகின் பிரபல நடிகர் அனுப் மேனன் முன்னணி திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் முடக்கப்பட்டது குறித்து சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.

அதில் சுமார் 15 லட்சம் ஃபோலோயர்ஸ் கொண்ட என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னைப்பற்றிய விபரங்களை அகற்றிவிட்டு பொழுதுப்போக்கு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து வந்த அட்மின்களும் நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரளா மாநில சைபர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால் விரைவில் என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு எனக்கு திரும்ப கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்படுட்ள்ளது என அனுப் மேனன் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கம் மீட்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து கேரள காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், கடந்த 6 மாதங்களாக தன்னால் பதிவிட்டப்பட்ட போஸ்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் முன்னதாக 15 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் கொண்ட தனது பக்கத்தில் தற்போது வெறும் 11 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் ஃபேஸ்புக் பக்கம் மீட்கப்பட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நடிகர் அனுப் மேன் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

From Around the web