பிரபல நடிகர் கவலைக்கிடம்..!! மருத்துவ அறிக்கை வெளியானது
1972-ல் வெளியான ‘நிர்தசாலா’ படித்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இன்னொசென்ட்டின். அதனைத் தொடர்ந்து 750-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘லேசா லேசா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ள இன்னொசென்ட், மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இன்னொசென்ட் கடந்த 2012-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இன்னொசென்ட் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொசென்ட் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.