விரைவில் கதாநாயகன் ஆகிறார் பிரபல நடிகரின் தம்பி ..! 

 
1

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னை ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் முரளி ரஜினிக்கு பின் விஜயகாந்த் அவருக்கு பின் முரளி என பேசப்படும் அளவுக்கு மக்கள் மனம் கவர்ந்த நாயகனாக முரளி வலம் வந்தார்.

இதையடுத்து பாண காத்தாடி என்ற படத்தின் மூலம் தனது மூத்த மகன் அதர்வாவை முரளி அறிமுகம் செய்து வைக்க அந்த படம் நடிகர் முரளிக்கு கடைசி படமாக போனது.

முரளியின் மரணத்திற்கு பின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்த வரும் அதர்வா இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது முறையில் இளைய மகனான ஆகாஷ் முரளியும் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் ரொமான்டிக் என்டர்டெய்னர் படத்தில் தான் ஆகாஷ் முரளி நாயகனாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துவருகிறார். மேலும் இவர்களுடன் தவிர சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

காதல் கதையாக உருவாகும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறாரம்.

தந்தையின் பெயரை அதர்வா நல்ல முறையில் காப்பாற்றி வரும் நிலையில் ஆகாஷ் முரளியும் அந்த பெயரை காப்பாற்றுவாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

From Around the web