தோழியின் வீட்டில் பிரபல நடிகை கைவரிசை..! தட்டி தூக்கிய போலீஸ்..! 

 
1

தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் போட்டு இணையத்தில் பிரபலம் ஆனவர் சௌமியா ஷெட்டி. மேலும், தெலுங்கில் டிரிப் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருட்டு வழக்கில் சிக்கியிருக்கிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விசாகப்பட்டினத்தில் பாலாஜி மெட்ரோ ரெசிடென்சியில் ஜனபால் பிரசாத்பாபு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டு போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்துபோலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும், குடும்பத்தினர் மத்தியில் விசாரிக்கையில் சந்தேகப்படும்படியாக 3 பேரை கூறினர்.

அதில் ஒருவர் தான் சௌமியா ஷெட்டி. இவரும், திருடப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜனபாலின் மகள் மௌனிகாவும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்த நட்புக்காக அடிக்கடி வீட்டுப் பக்கம் சென்ற சௌமியா ஷெட்டி, சந்தேகம் வராதபடி சிறுக சிறுக நகைகளை திருடி இரு்ககிறார். மௌனிகாவின் அறையை குளிப்பதற்காக பயன்படுத்தும் சௌமியா, நகை திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து சௌமியாவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 74 கிராம் தங்கத்தை மீட்ட அவர், மீதமுள்ள நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

From Around the web