24 வயதில் பிரபல நடிகை தூக்குபோட்டு தற்கொலை!

 
1

இன்றைய தமிழ் சினிமாவின் கதைகள் பேய் படங்களை சுற்றியே வருவதற்கு நடிகரும், இயக்குநருமான லாரன்ஸ் முக்கிய காரணம். இவர் இயக்கத்தில் வெளியான முனி படம் மெகா வசூலைக் குவித்ததையடுத்து, காஞ்சனா 1, 2, 3 என்று வரிசையாக படங்களை இயக்கி வசூலில் வெற்றியும் பெற்றார். 

இந்நிலையில், காஞ்சனா 3 படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் லாரன்ஸின் காதலியாக ரோஸி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரஷ்ய மாடலும், நடிகையுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்பவர்.  இவர் நடித்து, காஞ்சனா 3 படம் வெளியான போதே புகைப்பட கலைஞர் ஒருவர், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக புகார் கூறி இருந்தார். அந்த புகார் மீது புகைப்பட கலைஞரை போலீசார் கைதும் செய்திருந்தனர். இந்நிலையில், கோவாவில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 24. சடலமாக மீட்கப்பட்ட நடிகை ஜாவியின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

From Around the web