பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !!

 
பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !!

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

‘வழக்கு எண் 18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஒரு குப்பைக் கதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரை மனிஷா காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கிறேன். ஆனால் உடனடியாக தேறிவிடுவேன் என்று நம்பிக்கையாக இருக்கிறேன். இப்போதைக்கு மோசமாக எதுவும் இல்லை. கொஞ்சம் மூச்சுத்திணறல் மட்டும் அவ்வப்போது உள்ளது. ஆனால், இந்த கரோனாவை மொத்தமாகத் தாண்டி வருவதே சிறந்தது. எனவே அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, முகக்கவசம் அணிந்து இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


 

From Around the web