காருடன் குட்டையில் மூழ்கி பிரபல நடிகை உயிரிழப்பு!!

 
1

இந்தி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சுப்பம் டெட்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டியதைடுத்து திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர்.  

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக காரிலேயே கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா என்ற பகுதியில் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது  கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோர குட்டையில் விழுந்தது.

Iswari-Deshpande

அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த நடிகை ஈஸ்வரி மற்றும் அவரது காதலன் இருவரும் வெளிவர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இதனால் பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மறைவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் சோகத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web