பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..!!

 
1

பிரபல இந்தி நடிகை முர்னல் தாகூர் (வயது 29). மராட்டியத்தை சேர்ந்த இவர் இந்தி, மராத்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை முர்னலுக்கு நேற்று கொரோனா தொற்று உற்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை நான் கடைபிடித்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

From Around the web