மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை..!! 
 

 
1

2010-ல் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஓய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் மண்டேலா படம் தேசிய விருது பெற்றது.

Meera Jasmine

தற்போது தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் அவர் படங்கள் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது மீண்டும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


 

From Around the web