பிரபல நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி..!!
2006-ல் வெளியான ‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் இலியானா. அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இலியானா தனது நோய்க்கான காரணங்களை கூறாத நிலையில், கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றாலும்... ஃபுட் பாய்சன் காரணமாக இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இலியானா தன் உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் இலியானா தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)