திடீர் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல நடிகை..!

 
கே.பி.ஏ.சி. லலிதா

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை சோகமடையச் செய்துள்ளது.

மலையாள சினிமாவின் மூத்த நடிகையும் இரண்டு முறை தேசிய விருது வென்றவருமான கே.பி.ஏ.சி. லலிதாவுக்கு (74) கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள நடிகை இடைவேளை பாபு, நீரிழிவு நோய் காரணமாக கே.பி.ஏ.சி லலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகின்றனர். தற்போதைக்கு அவர் உடல்நலம் தேறி வருகிறார். கே.பி.ஏ.சி லலிதாவின் மகள் உண்ட இருந்து அவரை கவனித்துக் கொண்டு வருகிறார் எனஅவர் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் மூத்த நடிகயான கே.பி.ஏ.சி லலிதா, மறைந்த இயக்குநர் பரதனின் மனைவியாவார். 1978-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இதுவரை 550 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு முறை தேசிய விருது வென்றுள்ள இவர் தமிழில் அலைபாயுதே, கிரீடம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கே.பி.ஏ.சி. லலிதாவின் மகன் சித்தார்த் மலையாள சினிமாவில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த உடல்நலக்குறைவு திரையுலகத்தினரை கவலை அடையச் செய்துள்ளது. விரைவில் உடல்நலம் தேறி, அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web