பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை..!

 
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து பிரபல நடிகை வெளியேறிவிடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கு மிகப்பெரிய பார்வையாளர் வட்டம் உண்டு. இதில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் பலருக்கும் ரசிகர்களிடையே வரவேற்புண்டு.

அந்த வரிசையில் புதியதாக தொடரில் இணைந்தவர் ஐஸ்வர்யா. கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக இவர் சீரியலுக்குள் வந்தார். தற்போது கண்ணன் - ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் மாற்றமாக ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் ஏன் தொடரில் இருந்து வெளியேறினார் என்பது தெரியவில்லை. தற்போது அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாகவே நடிப்பதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலைக்கு பிறகு காவ்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதை தொடர்ந்து ரசிகர்களிடையே பிரபலமாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தொடரில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web