மனம் திறந்த பிரபல நடிகை..! யாருக்கும் தெரியாமல் அபார்ஷன் செய்தேன்,ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த குப்ரா சேட். நடிப்பதுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்து வருகிறார். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறுவதற்கு பெயர் போனவர் குப்ரா சேட்.மேலும் மனதில் பட்டதை தைரியமாக பேசும் நடிகை என பெயர் எடுத்தவர். இன்னும் திருமணமாகாத குப்ரா சேட் யாருக்கும் தெரியாமல் கருகலைப்பு செய்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் குப்ரா சேட் கூறியதாவது,
அபார்ஷன் செய்தபோது நான் ஸ்டிராங்கானவள் என தோன்றவில்லை. ரொம்ப வீக்காக உணர்ந்தேன். எதையோ இழந்தது போன்று உணர்ந்தேன். வெறுமையாக இருந்தது. நானாக முடிவு எடுத்து செய்தது எனக்கு தைரியத்தை கொடுத்தது.
நானாக சென்று அபார்ஷன் செய்து கொண்டேன். அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஒரு முறை என் தோழி ஒருவரை சந்தித்து பேசினேன். நான் சொல்வதை நீ கவனிக்கவில்லை குப்ரா என தோழி தெரிவித்தார். யாருக்கு அபார்ஷன் நடந்தது? உனக்கா என நான் கேட்டேன். அப்பொழுது தான் நான் அபார்ஷன் செய்திருக்கிறேன் என அவருக்கு தோன்றியது. உண்மையை சொல்லிவிட்டோம் என்பதை நானும் உணர்ந்தேன்.
இதுவரை யாரிடமும் சொல்லாததை சொல்லிவிட்டதால் நான் அழத் துவங்கிவிட்டேன். எனக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாமல் இருந்தது. நானாக முடிவு செய்து அபார்ஷன் செய்தபோது நான் இறந்திருந்தால் என்னவாகி இருக்கும்?. யாருக்கும் தெரியாது, யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. இது ஒன்றும் சாதாரண முடிவு இல்லை. அந்த முடிவு நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும் என்றார்.
குப்ரா சேட் சொன்னதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று கேட்க மாட்டோம். அந்த கருவை கலைக்காமல் வைத்திருந்தால் உங்களுக்கு துணையாக ஒரு உயிர் இருந்திருக்குமே. தற்போது வரை தனியாக இருக்கிறீர்கள். 40 வயதை தாண்டிவிட்டீர்கள். இனி திருமணம் செய்து கொண்டு தாயாக முடியுமா என தெரியவில்லை. கருவை கலைத்திருக்காமல் இருந்திருக்கலாம்.
நடந்தது நடந்துவிட்டது. அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். இனி அந்த உயிர் திரும்ப வராது. அடுத்த வேலையை கவனியுங்கள் என தெரிவித்துள்ளனர்.