கேப்டன் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரபல நடிகை..! 

 
1

கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் தினந்தோறும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ரம்பா மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

From Around the web