பிரபல நடிகை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா..?

 
நடிகை பிரணித்தாவுக்கு திருமணம்

சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்த பிரணிதா சுபாஷுக்கு சத்தமே இல்லாமல் திருமணம் நடைபெற்றுள்ளது கோலிவுட்டில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த ப்ரணிதா கன்னட மொழியில் வெளியான ‘பொறுக்கி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார். பிறகு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க துவங்கினார். கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து தமிழில் மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தியில் ஹங்கமா 2, புஜ்: தி பிரைடு ஆஃப் இந்தியா போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜூவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணம் கன்னட முறைப்படி நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த செய்தி வெளியாகி வந்த நிலையில், இன்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு பிரணிதா திருமணம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார்.

எனக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக எளிமையாக இந்த திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். அழைக்க முடியாமல் போனவர்கள் மன்னிக்கவும் என்று இன்ஸ்டா பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web