நடிகர் ஃபகத்தை போல் அரிய வகை நோயால் அவதிப்படும் பிரபல நடிகை..!

 
1

இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி‘ எனும் திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அடா ஷர்மா, யோஹிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் சைன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வௌியான நாள் முதலே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஆடா சர்மா. இவர் தமிழில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு மற்றும் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகை அடா சர்மா, தான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். எண்டோ மெட்ரியோசீஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகை சமந்தா, நடிகர் பகத் பாசில் ஆகியோர் அரிய வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web