மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபல நடிகை..!

 
மாஸ்டர் செஃப் தமிழ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகை ஒருவர் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேசளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. தற்போது இந்நிகழ்ச்சி தமிழுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி இந்த ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதீத பட்ஜெட், தொகுப்பாளர் விஜய் சேதுபதி என பல்வேறு அடையாளங்கள் இந்நிகழ்ச்சிக்கு இருந்தாலும், பார்வையாளர்களிடம் இன்னும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் புதிய யுக்தியை நிகழ்ச்சிக் குழு கையில் எடுத்துள்ளது.

அதன்படி வாரந்தோறும் பிரபலமான சினிமா நடிகர், நடிகைகளை நிகழ்ச்சிக்கு அழைத்து வர தயாரிப்புக் குழு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகிறார் நிக்கி கல்ராணி.

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி-யை முறியடிக்கும் நோக்கில் சன் டிவி திட்டங்களை வகுத்து வருகிறது. அதில் முதல் கட்டமாக ‘மாஸ்டர் செஃப் தமிழில்’ தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது.
 

From Around the web