ஹிட் சீரியலில் அம்மன் வேடத்தில் களமிறங்கும் பிரபல நடிகை !!

 
1

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அம்மன் சீரியலில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் பிரபலமான கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் அம்மன். இதில் மனிஷாஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல மாடலும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி அந்த தொலைக்காட்சிக்கான சமூகவலைதள பக்கத்தில் சம்யுக்தா கார்த்திக் அம்மன் தொடரில் தோன்றும் ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த சீரியலில் அவர் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 

From Around the web