கில்லி படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த பிரபல நடிகை..! 

 
1

 ’கில்லி’ படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பார்த்து வருகிறார்கள் என்பதும் அந்த வகையில் நடிகை  ரம்யா பாண்டியன் தனது அம்மாவுடன் ’கில்லி’ படம் பார்க்க வந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’கில்லி’ படத்தில் விஜய் அறிமுகம் ஆகும் காட்சி, த்ரிஷா அறிமுகமாகும் காட்சி, அதிரடி ஆக்சன் காட்சிகள், செல்லம் என பிரகாஷ்ராஜ் அறிமுகமாக காட்சிகள் ஆகியவற்றை படம் பிடித்து ரம்யா பாண்டியன் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வருவேன் என்று அவரது அம்மா கூறும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளன.

மேலும் ’அப்படி போடு போடு’ என்ற பாடலுக்கு ரசிகர்கள் சீட்டில் உட்காராமல் செம ஆட்டம் போட்ட காட்சிகளையும் ரம்யா பாண்டியன் படம் பிடித்து பதிவு செய்து உள்ளார் என்பதும் இந்த அனுபவத்தை இனி எந்த படத்திலும் பெற முடியாது என்று ரம்யா பாண்டியன் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது: 20 வருட கில்லி. ஒரு அனல் பறக்கும் சந்தோஷம். திரையில் மாயாஜாலத்தை பார்க்க முடிந்தது. மறக்க முடியாத அனுபவம்! விஜய் சாரின் மாஸ் ரசிகர்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கு ஒரு உண்மையான சான்று.

அம்மாவும் நானும் முழுவதுமாக மகிழ்ந்தோம், நினைவு கூர்ந்து ஏக்கமாக உணர்ந்தோம். அசல் வெளியீட்டின் போது திரையரங்குகளில் தவறவிட்டாலும், இப்போது அதை ஈடு செய்வது ஒரு அதிர்ஷ்டம் போல் உணர்கிறேன். 20 ஆண்டுகளுக்கு பிறகும் எங்களை கவர்ந்ததற்காக விஜய், த்ரிஷா, பிரகாஷ் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் பாராட்டுகள்!  வித்யாசாகர் அவர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் துடிப்புக்கு ஏற்ப நடனமாடச் செய்ய வைத்துள்ளார். 

From Around the web