சினிமாவில் நடித்துவிட்டு 23 வயதில் சீரியலுக்கு வந்த பிரபல நடிகை..!

 
பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா

கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்து கவனமீர்த்த பிரபல நடிகை சீரியலில் நடித்து வருவது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ’பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் ராதிகா. இவருடைய சொந்த ஊர் கர்நாடகாவாக இருந்தாலும், தமிழ் மொழியை சரளமாக பேசும் திறமை படைத்தவர்.

இவர் ஏற்கனவே கன்னடத்தின் ஒரு படமும், தமிழிலில் 2019-ம் ஆண்டு வெளியான ‘எம்பிரான்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.

கன்னட சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதாநாயகிகளே கிடையாது. இதனால் சொந்த மாநிலத்து ரசிகர்களாலே அவர் ஓரம்கட்டப்பட்டார். அதை தொடர்ந்து தமிழில் எம்பிரான் படத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெறவில்லை.

மீண்டும் சினிமாவுக்குள் நுழைவதற்கு ராதிகா முயற்சி செய்துகொண்டிருந்த போது, அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ‘பூவே உனக்காக’ சீரியல். அதில் நடிக்க ஆரம்பித்தவுடன் பிரபலமானார். தற்போது தொலைக்காட்சி உலகின் நம்பர் ஒன் ராணியாக வலம் வருகிறார்.

From Around the web