கார் விபத்தில் நீரில் மூழ்கி காதலுடன் உயிரிழந்த பிரபல நடிகை..!

 
ஈஸ்வரி தேஷ்பாண்டே

கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரபல நடிகை காதலுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் படங்களிலும், மராட்டி மொழிப் படங்களிலும் நடித்தவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே. கடந்த 15-ம் தேதி காதலன் சுப்பம் டெஜ் என்பவருடன் சேர்ந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றதாக தெரிகிறது. அதை தொடர்ந்து இருவரும் நேற்று முன்தினம் மும்பைக்கு திரும்பி வந்துள்ளனர்.

அப்போது கோவாவுக்கு அருகேவுள்ள அர்போரா கிராமம் என்கிற பகுதிக்கு கார் வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த குட்டையில் தலைக்குப்புற கவிழ்ந்து விழந்துள்ளது.

இதனால் வெளியே வர முடியாமல் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவருடைய காதலன் சுப்பம் டெஜ் இருவரும் உயிரிழந்தனர். அடுத்த மாதம் இவர்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் வாகன விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web