திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகை..!

 
காதலருடன் ஃப்ரீடோ பின்டோ

திருமணம் செய்யாமல் காதலருடன் வசித்து வந்த நடிகை ஃப்ரீடோ பிண்டோ தான் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஃப்ரீடா பின்டோ ஆங்கிலத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் உலகளவில் பிரபலமானார். அந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த தேவ் படேல் என்பவரை காதலித்து வந்தார்.

பிறகு இருவரும் தங்களுடைய உறவை முறித்துக்கொண்டனர். தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் புகைப்படக் கலைஞர் கோரி ட்ரான் என்பவரை ஃப்ரீடா பின்டோ காதலிக்க துவங்கினார்.

இருவரும் சேர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்நிலையில் கோரியின் பிறந்தநாள் அன்று சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார் ஃப்ரீடா.

அதன்படி தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாக கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web