கொரோனாவால் மகனையும் கணவரையும் அடுத்தடுத்து இழந்த பிரபல நடிகை..!

 
கணவருடன் நடிகை கவிதா

கொரோனாவால் மகன் இறந்த இரண்டு வாரங்களில் கணவரையும் பறிகொடுத்த பிரபல நடிகையின் நிலை பலரையும் கவலை அடையச் செய்துள்ளது.

1970களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் கவிதா. இவர் நடிப்பில் வெளியான காற்றினிலே வரும் கீதம், ஆட்டுக்கார அலமேலு போன்ற படங்கள் டிரெண்ட் செட்டர் படங்களாக அமைந்தன. அதை தொடர்ந்து பாண்டவர் பூமி, அவள் வருவாளா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடரில் கவிதா நடித்து வந்த போது, அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே போல அவருடைய கணவருக்கும் பாதிப்பு உருவானது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வாரங்களில் மகன் சாய் ரூப் காலமானார்.

அதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணவர் தசரதராஜ், மகன் இறந்த இரண்டு வாரங்களில் காலமானார். ஒரே மாதத்தில் மகனையும், கணவரையும் பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

From Around the web