நிச்சயதார்த்தம் முடிந்த பின், திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை!

 
1

தன்னுடைய நிச்சயதார்த்தம் முடிந்து, அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், தனது திருமணம் நடைபெறாது என நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

நெஞ்சில் துணிவிருந்தால், விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷ் உடன் பட்டாஸ் படங்களில் நாயகியாக நடித்துள்ள மெஹ்ரின், தெலுங்கு, பஞ்சாபி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும் பாவ்யா பிஷ்னோய் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பாவ்யா, ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் பஜன் லாலில் பேரன்.

இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் தாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்றும், தங்களது திருமணம் நடைபெறாது என்றும் மெஹ்ரின் தெரிவித்துள்ளார். இந்த முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்திருக்கிறோம் என்றும், இருவரின் நலன் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மெஹ்ரின் தெரிவித்துள்ளார். இனி பாவ்யாவுடனோ, அவர் குடும்பத்தினருடனோ எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என அதிரடியாக பதிவிட்டுள்ளார்.


 

From Around the web