தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த கொண்ட பிரபல நடிகை..!

 
1

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, அவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார்.

அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதையும், செல்ஃபி எடுப்பதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருப்பார்.

இந்நிலையில், தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றபின், நேற்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்டதால், காவலர்கள் அவரைப் பின்தொடா்ந்து பாதுகாப்புக்காக வந்தனா்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா, முதல்வரின் சைக்கிள் பயணத்தின்போது அவருடன் அருகில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் யாஷிகா வெளியிட்டுள்ளார்.


 

From Around the web