ராஜா ராணி சீசன் 2 சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை..!

 
ராஜா ராணி சீசன் 2 சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை..!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் புதியதாக பிரபல நடிகை ஒருவர் அறிமுகமாகவுள்ளார். அவருடைய அறிமுகம் தொடருக்கு பெரியளவில் டி.ஆர்.பி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலுடன் நடத்தப்பட்ட மெகா சங்கம் நிகழ்ச்சிக்கு பிறகு, புதியதாக ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி சீசன் 2’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதை சரியாக பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு யுக்திகளை தயாரிப்புக் குழு கையாண்டு வருகின்றனர்.

அதன்படி வாணி ராணி, அன்பே வா, கோலங்கள் என பல்வேறு சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரீலேகா ராஜேந்திரன் மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் இந்த தொடரில் கால்பதித்துள்ளார்.

அவருடைய அறிமுக ப்ரோமோவுக்கே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவருடைய கதாபாத்திரம் சீரியலுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என நிகழ்ச்சிக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

From Around the web