பரபரப்பான வீதியில் ஆட்டோவை ஓட்டி சென்ற பிரபல பாலிவுட் நடிகர்!!

 
1

பன்வேல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தமது 56 வது பிறந்தநாளை சல்மான் கான் கடந்த சனிக்கிழமையன்று கொண்டாடினார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மறுநாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவர் பாம்புடன் படம் பிடித்து நட்பாகி விட்டதாக குறிப்பிட்டார், பாம்பைக் கொல்லவில்லை என்றும் சல்மான் கான் தெரிவித்தார்.

இந்த நிலையில் நவி மும்பை அருகே உள்ள பன்வேல் நகரில் அவர் ஆட்டோ ஓட்டுவதை கண்டு, அங்கிருந்த பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர். டீ-சர்ட் மற்றும் தொப்பி அணிந்திருந்த சல்மான் கான், பரபரப்பான வீதியில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் பயணி ஒருவர் இருந்ததாக தெரிகிறது.


 

From Around the web