பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார் காலமானார்..!!

 
1

1984 முதல் பாலிவுட் திரையுலகில் நடிகையாக வலம் வரும் மாதுரி தீட்சித், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பை விடவும் தனது நடனத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட பெருமை இவருக்கு உண்டு. முக்கியமாக ‘புகார்’ படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஹிட்டடித்த Kay Sera Sera என்ற பாடலில், பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்து ஆட்டத்தில் கலக்கியிருப்பார். 

அதேபோல், ஷாருக்கானின் தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற Dola Re Dola பாடலில் ஐஸ்வர்யா ராய்யும் மாதுரி தீட்சித்தும் அமர்க்களம் செய்திருப்பார்கள். பாலிவுட்டில் இப்போதும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாதுரி தீட்சித் பார்க்கப்படுகிறார்.

MadhuriDixit

இந்நிலையில், அவரது அம்மா சினேலதா தீட்சித் நேற்று  (மார்ச் 12) காலை 8.30 மணியளவில் காலமானார். இதனையறிந்த பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதுரி தீட்சித்தின் தந்தை ஷங்கர், 2013-ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் மகள் மாதுரி தீட்சித்துடன் வசித்து வந்தார் சினேலதா. உயிரிழந்த மாதுரி தீட்சித்தின் அம்மா சினேலதா, சிறந்த கிளாசிக்கல் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அம்மாவிடம் இசை கற்றுக்கொண்ட மாதுரி தீட்சித், அதன் பலனாக சில பாடல்களையும் பாடியுள்ளார். சினேலதாவுக்கு பார்தி, ரூபா தீட்சித் என மேலும் 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவருக்கு மாதுரி தான் செல்ல மகளாக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி மாதுரி தீட்சித்தின் கணவர் ஸ்ரீராம் நேனி மருத்துவர் என்பதால், அவரே சினேலதாவின் உடல்நலத்தையும் கவனித்துள்ளார்.

RIP

சினேலதா மறைவுக்கு வயது மூப்பு தான் காரணம் என சொல்லப்படுகிறது. தாயாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகை மாதுரி தீட்சித்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web