பிரபல பாலிவுட் நடிகை தன்னை விட 5 வயது இளைய நடிகரை மணக்கிறார்?

 
1

பிரபல நடிகை கத்ரினா கைப்புக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. எனினும், இருவரும் அவர்களது திருமணம் குறித்து இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். ஊடகங்கள் விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்ட் ஓட்டலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா, கரண் ஜோஹர், கியாரா அத்வானி உட்பட பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். இதன்காரணமாக, இரு நடிகர்களின் மேலாளர்களும் இத்திருமணத்தை முன்னிட்டு ஓட்டல் அறைகள் மற்றும் கார்கள் போன்றவற்றை இப்போதிருந்தே முன்பதிவு செய்துவிட்டனர்.

நடிகை கத்ரினா கைப் ஹாங்காங்கில் பிறந்தவர். அவருக்கு 5  சகோதரிகள் உள்ளனர். அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஆவார், தந்தை காஷ்மீரை சேர்ந்தவர் . அவர் ‘பூம்’ திரைப்படம் மூலமாக இந்தி சினிமாவுக்கு அறிமுகமானார்.

அவருக்கும் பிரபல நடிகர் விக்கி கவுசாலுக்கும் டிசம்பர் மாதம் 7-9 வரையிலான தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் சல்மான் கான் தற்போது டைகர்-3 படப்பிடிப்பில்  இருப்பதால் அவரால் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சல்மான் கானின் குடும்பம் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளும்.
 
நடிகை கத்ரினா கைப் 1983-ம் ஆண்டு பிறந்தவர். நடிகர் விக்கி கவுசால் 1988-ம் ஆண்டு பிறந்தவர். இவர்கள் இருவருக்குமிடையே 5 வயது  இடைவெளி உள்ளது.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த விஷயம் வெளிவராமல் ரகசியமாக இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் அவர்களது திருமணம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web