பிரபல குணச்சித்திர நடிகை சித்ரா திடீர் மரணம்- குடும்பத்தினர் அதிர்ச்சி..!

 
குடும்பத்தினருடன் நடிகை சித்ரா

தமிழில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த நடிகை சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை சித்ரா தமிழில் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் நடித்தார். மலையாளத்தில் மோகன்லான் உடன் ‘ஆட்ட கலசம்’ என்கிற படத்தியில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் தமிழில் குணச்சித்திர நடிகையாகவே அவரால் முத்திரை பதிக்க முடிந்தது. 

ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பெரிய குடும்பம், பொண்டாட்டி ராஜ்ஜியம் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் கதாநாயகியை விடவும் இவருக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்.

இதற்கிடையில் இவர் நடிப்பில் வெளியான நல்லெண்ணெய் விளம்பரம் பட்டிதொட்டி எங்கும் சித்ராவை பிரபலமாக்கியது. அன்று முதல் இவரை பலரும் நல்லெண்ணெய் சித்ரா என்றே அழைக்க தொடங்கினர். தற்போதும் இவரை பலரும் அவ்வாறே குறிப்பிட்டு அழைத்து வந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு சினிமாவிட்டு ஒதுங்கி இருந்த சித்ரா, மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட சில ரியால்ட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சித்ராவுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். நடிகை சித்ராவின் திடீர் மரணம் குடும்பத்தினரையும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
 

From Around the web