புகழ், சரத்தை தொடர்ந்து புதிய வாகனம் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்..!

 
குக் வித் கோமாளி சீசன் 2

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்து தொலைக்காட்சி துறையில் புதிய பாய்ச்சலாக உயர்ந்துள்ள சக்தி புதியதாக வாகனம் வாங்கியுள்ள தகவலை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

டிக்டாக்கில் வீடியோ பதிவிட தொடங்கி, யூ- ட்யூப் மூலம் பிரபலமானவர் சக்தி. அவரை குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கோமாளியாக அறிமுகம் செய்தது நிகழ்ச்சிக் குழு. கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தன்னுடைய சின்ன சின்ன கடி ஜோக்குகளால் மக்களை கவர்ந்தார்.

இதனால் அவருக்கான ரசிகர் வட்டம் உருவானது. தொடர்ந்து அவருடைய யூ-ட்யூப் சேனலுக்கும் ஃபோலோயர்ஸுகள் குவிந்தனர். இதன்மூலம் சமூகவலைதளங்களில் இருக்கும் முக்கிய சென்சேஷன் நபராக உயர்ந்துவிட்டார் சக்தி.இந்நிலையில் அவர் புதியதாக கேடிஎம் நிறுவனத்தின் சூப்பர்பை க் மாடலை வாங்கியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். பல்வேறு கட்ட முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு பிறகு பிடித்த பைக்கை வாங்கியுள்ளதாக சக்தி தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்களான புகழ் ஹூண்டாய் கிரெட்டா காரையும், சரத் மாருதி டிசையர் காரையும் சொந்தமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது.

From Around the web