புற்றுநோய் பாதிப்பால் பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மரணம்..!

 
கூல் ஜெயந்த்

தமிழ் சினிமா கொண்டாடும் பல பாடல்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

கடந்த 1996-ம் ஆண்டு தமிழில் வெளியான படம் காதல் தேசம். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றன. அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓ மரியா’ என்கிற பாடலை ரசிகர்கள் இன்னும் ரசிக்கின்றனர்.

அந்த பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூல கூல் ஜெயந்த் தமிழ் சினிமாவில் பிரபலமானார். மேலும் அவர்  ப்ரியமானவளே, வாலி, குஷி என மிகப்பெரியளவில் வெற்றி பெற்ற படங்களில் நடன இயக்குநராக பணியாற்றினார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பணியாற்றி முன்னணி நடன இயக்குநராக இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அதற்காக சிகிச்சை பெற்று வந்த கூல் ஜெயந்த் இன்று காலை சென்னையில் காலமானார். அவருடைய உடலுக்கு ரசிகர்கள், திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web