பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கவலைக்கிடம்.. பிரபல பாலிவுட் நடிகர் உதவி

 
1

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1,300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

இந்தநிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது  உடல்நிலை கவலைக்கிடமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரின் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டரின் மகன் சோசியல் மீடியாவில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.


 

From Around the web