பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு... தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவை உருவாக்கியதே தனுஷ் குடும்பம் தான்..!
’ஜோடி’ உள்பட சில படங்களை இயக்கிய இயக்குனர் பிரவீன் காந்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்தபோது, முதன்முதலாக தனுஷ் மற்றும் செல்வராகவன் படங்கள் தான் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்துள்ளார்.
’துள்ளுவதோ இளமை’ படத்தில் கிளாமரான காட்சிகள் உண்டு என்றும் மாணவ பருவத்திலேயே கெட்டுப்போகும் காட்சிகள் வைத்தது அந்த படத்தில் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’காதல் கொண்டேன்’ திரைப்படத்திலும் அடுத்தவன் காதலியை எப்படி அடைவது போன்ற காட்சிகள் இருக்கும் என்றும் அதேபோல் அப்பா முன் குடிப்பது, அப்பாவை மரியாதை குறைவாக பேசுவது அப்பாவை மதிக்காமல் இருப்பது போன்ற காட்சிகள் எல்லாம் தனுஷ் படத்தில் தான் வந்தது என்றும் தனுஷ் குடும்பமே கலாச்சார சீரழிவை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரவீன் காந்தி சொல்லும் குற்றச்சாட்டு ஓரளவு உண்மை என்றாலும் இம்மாதிரியான படங்கள் ஆரம்ப கட்டத்தில் மட்டும் தான் என்றும், அதன்பின் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்களில் தனுஷ் நடிக்க தொடங்கிய பின் சிறந்த கதைகளை அவர் தேர்வு செய்தார் என்பதும் தற்போது அவர் சமூக பொறுப்புள்ள கதைகளில் தான் நடித்து வருகிறார் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.