’அண்ணாத்த’ படத்துக்காக ரஜினிகாந்துக்கு குரல் கொடுத்த பிரபல ஹீரோ..!

 
ரஜினிகாந்த்

வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துக்கு பிரபல ஹீரோ பின்னணி குரல் பேசியுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

தமிழில் நேரடியாக வெளியாகும் இப்படம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அண்ணாத்த படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு பாடகர் மனோ ரஜினிகாந்துக்கு பின்னணிப் பேசியுள்ளார்.

இப்படத்தின் கன்னடப் பதிப்பின் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு பிரபல நடிகர் சாய் குமார் குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே கன்னட மொழி பதிப்புக்கு ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர் சாய் குமார் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web