வெள்ளித்திரையில் கால்பதிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை..!

 
ஸ்ரேயா அஞ்சன்

சீரியலில் நடித்து தமிழக தொலைக்காட்சி ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ஸ்ரேயா அஞ்சன் விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நடித்தவர் ஸ்ரேயா அஞ்சன். அதே சீரியலில் ஹீரோவாக நடித்தவர் சித்து. தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரேயா ரஞ்சன் “ஐந்து உணர்வுகள்” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது எழுத்தாளர் ஆர். சூடாமணி எழுதிய “அம்மா பிடிவாதக்காரி” என்கிற கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகீறது.

அறம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஞான ராஜசேகரன் இயக்கியுள்ளார். சாந்தி வில்லயம்ஸ், சுஜிதா போன்ற மற்ற சீரியல் பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 
 

From Around the web