பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை- உருக்கமான கடிதம் மீட்பு..!

 
நடிகை சவுஜன்யா

சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகி வந்த நடிகை சவுஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சவுஜன்யா. இவர் பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டு பகுதி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக குடியிருப்புவாசிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து நடிகை சவுஜன்யாவின் உடலை மீட்டனர். அதை தொடர்ந்து அக்கம் பக்கத்து குடியிருப்பு வாசிகள், பெற்றோர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

சவுஜன்யா தூக்கில் தொங்கிய அறையில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் மனதளவில் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் கடிதத்தில் சவுஜன்யா குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் சவுஜன்யா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சவுஜன்யாவின் தற்கொலை சம்பவம் டிவி மற்றும் சினிமா உலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web