துபாய் தொழிலதிபரை மணமுடிக்கும் பிரபல ’நாகின்’ நடிகை..!
 

 
மவுனி ராய்

நாகின் சீரியலில் நடித்து தமிழ்நாட்டிலும் பிரபலமான மவுனி ராய், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த தொடர் ‘நாகின்’. இந்தி மொழி தொடராக இது, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிப்பரப்பானது. அதில் நாக தேவதையாக நடித்து தமிழக ரசிகர்களை கொள்ளை கொண்டவர் மவுனி ராய்.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் இவருக்கு அதிகரித்து வரும் வரவேற்பை கவனித்த சிலர், மவுனி ராய் பஞ்சாமி மற்றும் பெங்காலியில் நடித்த  தொடர்களையும் தமிழில் டப் செய்து ஒளிப்பரப்பு செய்தனர். அதுவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

அதை தொடர்ந்து தான் இவரை பாலிவுட் உலகம் கண்டுகொண்டது. உடனடியாக அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 2018-ம் ஆண்டு வெளியான ‘கோல்டு’ படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார்.

மேலும் 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்புக்காக ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடினார். அது பாலிவுட் ரசிகர்களை விடவும் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்தது. சமீப காலமாக இவர் கேராளவைச் சேர்ந்த துபாய் நாட்டு தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

அந்த தகவல்களை உறுதி செய்யும் விதமாக விரைவில் மவுனி ராய் மற்றும் சுராஜ் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி அவர்களுடைய திருமணம் வரும் 2022 ஜனவரி மாதம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெறும் என கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக மவுனி ராய் ஊடகங்களிடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web