பிரபல தயாரிப்பாளர் பாபுராஜா திடீர் மரணம்..! கோலிவுட் அதிர்ச்சி..!

 
பிரபல தயாரிப்பாளர் பாபுராஜா திடீர் மரணம்..! கோலிவுட் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் பல்வேறு ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பாபுராஜா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 53.

எஸ்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர் பாபுராஜா என்கிற பாபா பக்ரூதின். சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தார்.

அவருடைய தயாரிப்பில் வெளியான சத்ரபதி மற்றும் அரசு போன்ற படங்கள் முக்கியமானவை. அதை தொடர்ந்து விக்ராந்த் நடித்த ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ படத்தை தயாரித்துள்ளார். கடைசியாக சில படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில காலமாகவே அவருக்கு இதயத்தில் கோளாறு இருந்துள்ளது. அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். சமீபத்தில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். தயாரிப்பாளர் பாபா பக்ரூதின்னுக்கு மும்தாஜ் என்கிற மனைவியும், ஜாவீத் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். அவருடைய மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From Around the web