பிரபல தயாரிப்பாளர் முத்துராமன் மறைவு!: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்கள் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் எம்.முத்துராமன். 83 வயதான இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவியும் அனு என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல தமிழ்படங்களைத் தயாரித்தவர் எம் முத்துராமன். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களை அவர் தயாரித்துள்ளார்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா 'பேரப்பிள்ளை படத்தை அவர் தான் தயாரித்திருந்தார். மேலும் ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த ஒரு வீடு ஒரு மனிதன் படம் சிறந்த படத்திற்கான மாநில விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துராமன் இன்று காலை உயிரிழந்தார்.

எம்.முத்துராமனின் மரணத்திற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web