பிரபல தயாரிப்பாளரின் மகள் 20 வயதில் திடீர் மரணம்!

 
1

பாலிவுட்டில் பேவபா சனம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் தான் நடிகரும் தயாரிப்பாளரும் ஆன கிரிஷன் குமார்.

2022 ஆம் ஆண்டு வெளியான கார்த்திக் ஆரியன் நடித்த பூல் புலையா 2 படத்தையும் இவர் தயாரித்துள்ளார். இந்தப் படம் பிளாக் பாஸ்டர்  ஹிட் அடித்ததோடு வசூல் ரீதியாகவும் 250 கோடி வரை வசூலித்திருந்தது.

இது தவிர, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ரன்பீர் கபூரின் அனிமல் படத்தையும் கிரிஷன் மற்றும் பூஷன் இணைந்து தயாரித்திருந்தனர். 

இந்த நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீண்ட நாட்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 20 வயதிலேயே  கிரிஷன் குமாரின் மகளான திஷா குமார் உயிரிழந்துள்ளார்.

தற்போது இவரது மறைவிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருவதோடு  கிரிஷன் குமாருக்கும் தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள்.

From Around the web