பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..!

 
ரமேஷ் வலியசாலா
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள மொழிகளில் தயாரான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரமேஷ் வலியசாலா. சினிமாவில் நடிப்பதற்கான முனைப்பில் இருந்து வந்த அவர், சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அவ்வப்போது சில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

வழக்கமான சீரியல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீடுட்க்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய சடலத்தை கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமேஷ் வலியசாலா மரண விவகாரத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு ஏற்பட்ட கடன் சுமையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

From Around the web