மீண்டும் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் ஹீரோ..!

 
தமிழும் சரஸ்வதியும் சிரீயல்

மீண்டும் நடிப்புப் பக்கம் திரும்பியுள்ள தீபக் தினகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் என்கிற தொலைக்காட்சி தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமாக இருந்தவர் தீபக் தினகர். சில ஆண்டுகளாக இவர் எந்தவிதமான பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் வராமல் இருந்து வந்தார். இதற்கான காரணம் குறித்து பெரிதாக தெரியவில்லை.

இந்நிலையில் விஜய் டிவி-யில் விரைவில் ஒளிப்பரப்பாகும் ’தமிழும் சரஸ்வதி’ தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நக்‌ஷத்ரா நாகேஷ், லாவண்யா மாணிக்கம், நவீன் வெற்றி, மீரா கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா, ராமசந்திரன் மஹாலிங்கம், யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடிகர் தீபக் தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, நக்‌ஷத்ரா நாகேஷ் சரஸ்வதியாக நடிக்கிறார். இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள தீபக், தமிழும் சரஸ்வதி தொடரில் தமிழாக நான் நடிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய மறுபிரவேசத்திற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
 

From Around the web