திருமண உறுதி செய்துகொண்ட பிரபல சீரியல் நட்சத்திரங்கள்..!
 

 
தீபக் மற்றும் அபிநவ்யா திருமண நிச்சயதார்த்தம்

தமிழ் தொலைக்காட்சி பிரபலங்களான தீபக் மற்றும் அபிநவ்யா இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறியவர் அபிநவ்யா. இவர், பிரியமானவள்,  கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வரும் சித்தரம் பேசுதடி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு.

இவருக்கும் திருமணம் சீரியல் மூலம் நடிகராக அறிமுகமான தீபக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்யவுள்ளனர்.

திருமணம் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை இருவரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த ஜோடியின் திருமண தேதி முடிவாகிவிட்டதால், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

From Around the web