இசைஞானி தலைமையில் நடைபெற்ற பிரபல பாடகரின் திருமணம்..!
Jan 12, 2025, 06:05 IST
இசை கலைஞர் அறிவு தனது காதலியான கல்பனாவை தற்போது திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த பின் தெருக்குரல் அறிவு மற்றும் கல்பனா அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்நிலையில் இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.