விஜய் டிவியில் இருந்து விலகிய பிரபல சின்னத்திரை நடிகர்!
Apr 27, 2023, 08:05 IST

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பாக்கியலட்சுமி‘ சீரியல் மக்களிடையே பிரபலமான தொடராக இருக்கிறது. இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் நிலையில், இந்த தொடருக்கு அதிகமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான, கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வந்தார்.
இந்நிலையில், இந்த தொடரிலிருந்து விலகுவதாக நடிகர் சதீஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அவருடைய இன்ஸ்டாகிராமில் கண்கலங்கியபடி வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் சொந்த காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.